மிட்டூர், மரிமாணிகுப்பம் ஊராட்சிகளில் 100 நாள் திட்ட பதிவேடுகளை கலெக்டர் ஆய்வு


மிட்டூர், மரிமாணிகுப்பம் ஊராட்சிகளில் 100 நாள் திட்ட பதிவேடுகளை கலெக்டர் ஆய்வு
x

மிட்டூர், மரிமாணிகுப்பம் ஊராட்சிகளில் 100 நாள் திட்ட பதிவேடுகளை கலெக்டர் ஆய்வு செயதார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

மிட்டூர், மரிமாணிகுப்பம் ஊராட்சிகளில் 100 நாள் திட்ட பதிவேடுகளை கலெக்டர் ஆய்வு செயதார்.

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தின்கீழ் மிட்டூர் மற்றும் மரிமாணிகுப்பம் ஊராட்சி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஊராட்சிகளில் ஆய்வு ெசய்வதற்காக கலெக்டர் அமர்குஷ்வாஹா திடீரென சென்றார். ஆய்வின்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் வேலை பதிவேடுகள், பிரதம மந்திரி வீடுகள் வழங்கப்பட்ட விபரங்களின் பதிவேடு, கிராம சபை கூட்டங்கள் குறித்த பதிவேடு, சாலைப் பணிகள், வரிவிதிப்பு, குடிநீர் கட்டணங்கள் குறித்த பதிவேடு, வரவு-செலவு கணக்கு பதிவேடு உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் 15-வது நிதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள், தினசரி வருகை பதிவேடு, 100 நாள் வேலைத்திட்ட ஊதிய வழங்கும் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான பதிவேடுகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேற்கண்ட பதிவேடுகளில் நிலுவையில் உள்ள பதிவுகளையும் உடனடியாக பதிவுசெய்து, அனைத்து பதிவேடுகளை சரியாக பராமரிக்கப்பட வேண்டும் எனவும், ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து முழு விவரங்களை அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஊராட்சி செயலாளர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

ஆய்வுகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார், மரிமாணிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் துளசிராமன், மிட்டூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் தயாளன், உதவி பொறியாளர் முருகேசன், ஊராட்சி மன்ற செயலாளர்கள் (மிட்டூர்) ஆஷா, (மரிமாணிகுப்பம்) குணசேகரன் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story