300 பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆய்வு


300 பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆய்வு
x

விருதுநகரில் 300 பள்ளி வாகனங்களில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டதில் 15 வாகனங்கள் நிராகரிக்கப்பட்டன.

விருதுநகர்

விருதுநகரில் 300 பள்ளி வாகனங்களில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டதில் 15 வாகனங்கள் நிராகரிக்கப்பட்டன.

கலெக்டர் ஆய்வு

விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் விருதுநகர் போக்குவரத்து வட்டாரத்தில் உள்ள சாத்தூர், காரியாபட்டி, திருச்சுழி மற்றும் அருப்புக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 84 தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான 300 வாகனங்களை கலெக்டர் மேகநாதரெட்டி ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது 285 வாகனங்கள் முழு தகுதி உடையதாகும். 15 வாகனங்கள் முழு தகுதி இல்லாத வாகனங்கள் ஆகும் என கண்டறியப்பட்டு தகுதியில்லாத 15 வாகனங்கள் நிராகரிக்கப்பட்டது. இந்த நிராகரிக்கப்பட்ட வாகனங்கள் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

அறிவுறுத்தல்

இந்த ஆய்வின்போது வாகனங்களின் தற்போதைய நிலை, குழந்தைகளின் பாதுகாப்பு அரசு விதிமுறைகளின்படி வாகனங்கள் இயக்கப்படுகிறதா, முதலுதவிப்பெட்டி மற்றும் தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளதா என்பது குறித்தும், அவசரகால வழிகள், இருக்கைகள், வாகனங்களின் தரைத்தளம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பள்ளி வாகனங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி விபத்தில்லாமல் பாதுகாப்பு முறைகளை பின்பற்றி பள்ளிக்குழந்தைகளை பாதுகாப்பாக வாகனங்களில் அழைத்துச் சென்று வரவேண்டும் என பள்ளி வாகன ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

விழிப்புணர்வு கையேடு

ஆபத்து காலங்களில் செய்யப்படும் முதலுதவி பயிற்சி விருதுநகர் மாவட்ட 108 அவசர ஊர்தி அலுவலர்களால் செயல்முறை விளக்கம் நடத்திக் காட்டப்பட்டது. மேலும் அனைத்து ஓட்டுனர்களும் பயன்பெறும் வகையில் தடுப்பூசி மையம் அமைத்து தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேட்டினை கலெக்டர் வழங்கினார். இந்த ஆய்வின்போது அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாணகுமார், வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன், ஆய்வாளர்கள் செல்வராஜ், கண்ணன், போக்குவரத்து அலுவலர்கள், தீயணைப்புத் துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story