கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு


கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 4 May 2023 12:30 AM IST (Updated: 4 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழாவில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்கள் மற்றும் ரத்தப்பரிசோதனை நிலையங்களில் கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு மேற்கொண்டு எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து, எய்ட்ஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை பார்வையிட்டு இத்திருவிழாவிற்கு வருகைபுரிந்துள்ள பொதுமக்கள், திருநங்கைகள் இம்மருத்துவ முகாம்களை பயன்படுத்திக்கொண்டு ரத்தப்பரிசோதனை செய்து கொள்ளுமாறும், இத்திருவிழாவில் திருநங்கைகளுக்கு இடையூறு அளிக்காமல் அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோகஜோதி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவாகரன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க துணை இயக்குனர் ஜானகிராமன், உதவி இயக்குனர்கள் தங்கவேல், முத்துகுமாரசாமி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட அலுவலர் செல்வம், உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், தாசில்தார் ராஜி, திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், செல்வபோதகர், கூவாகம் ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story