தரைப்பாலம் கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு


தரைப்பாலம் கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு
x

மேல்பாடியில் பொன்னை ஆற்றின் தரைப்பாலம் கட்டும் பணியை கலெக்டர் குமாரவேல் ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

தரைப்பாலம்

காட்பாடியை அடுத்த மேல்பாடி பகுதியில் கடந்த வருடம் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் ரூ.12 கோடியில் மேல்பாடியில் மீண்டும் தரைப்பாலும் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

அதைத்தொடர்ந்து தரைப்பாலம் அமைக்கும் பண் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தரைப் பாலத்தை தரமான முறையில் அமைக்கிறார்களா?, பணிகள் விரைவாக நடைபெறுகிறதா என ஆய்வு மேற்கொண்டார்.

உறுதியாக கட்ட வேண்டும்

மேலும் காட்டாற்று வெள்ளம் அதிக அளவில் வந்தாலும் அதை தாக்குப்பிடிக்கும் அளவிற்கு பாலத்தை மிகவும் உறுதியாக கட்டி முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். நீர்வளத்துறை செயற்பொறியாளர் ரமேஷ், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், மேல்பாடி ஊராட்சி மன்ற தலைவர் நித்தியானந்தம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story