இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வீடுகள் கட்டும் பணிகளை கலெக்டர் ஆய்வு


இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வீடுகள் கட்டும் பணிகளை கலெக்டர் ஆய்வு
x

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வீடுகள் கட்டும் பணிகலெக்டர் ஆய்வு

வேலூர்


இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வீடுகள் கட்டும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.


வேலூரை அடுத்த மேல்மொணவூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.11 கோடி மதிப்பில் 220 வீடுகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த பணியை வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டுமான பணியின் தற்போதைய நிலவரம் குறித்தும், அனைத்து பணிகளும் நிறைவடையும் நாள் பற்றியும் அதிகாரிகள், ஒப்பந்ததாரரிடம் கேட்டறிந்தார்.

பின்னர் கலெக்டர், வீடு கட்டும் பணியை தரமாகவும் உரிய காலத்தில் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது வேலூர் தாசில்தார் செந்தில், பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் நிஜாமுதீன் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.



Next Story