இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வீடுகள் கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு


இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வீடுகள் கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு
x

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வீடுகள் கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

வேலூர்

வேலூரை அடுத்த மேல்மொணவூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.11 கோடி மதிப்பில் 220 வீடுகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியை வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டுமான பணியின் தற்போதைய நிலவரம் குறித்தும், அனைத்து பணிகளும் நிறைவடையும் நாள் பற்றியும் அதிகாரிகள், ஒப்பந்ததாரரிடம் கேட்டறிந்தார். பின்னர் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும், குடிநீர், சாலை, மின்வசதி பணிகளை தரமாகவும். உரிய காலத்தில் விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது வேலூர் உதவி கலெக்டர் கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செந்தில்குமார், வேலூர் தாசில்தார் செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட் ரமேஷ்பாபு, சரவணன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story