வளர்ச்சி பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு


வளர்ச்சி பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 13 Sept 2023 12:15 AM IST (Updated: 13 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வளர்ச்சி பணிகள்

திருமருகல் ஒன்றியம் அகரகொந்தகை முதல் ஆலங்குடிச்சேரி கிராமம், திருமலைராயன் பட்டினம் வரையிலும், நெய்குப்பை ஊராட்சி முதல் மருங்கூர் ஊராட்சி வரையிலும் மற்றும் வவ்வாலடி கிராமம் முதல் அரசூர் ரோடு வரை பிரதம மந்திரி சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதேபோல் குத்தாலம், நரிமணம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தலா ரூ.26 லட்சம் என மொத்தம் ரூ.52 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களின் கட்டுமான பணிகளையும், மருங்கூர் ஊராட்சி காலனித்தெருவில் மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைக்கான அடையாள அட்டையினையும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிகள் நடைபெறுவதையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

மருங்கூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள சமையல் கூடத்தில் உணவு தயார் செய்ய பயன்படும் பொருட்களின் தரம் மற்றும் வகுப்பறையில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வியின் தரம் குறித்தும், திருப்புகலூர் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்தும் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சேகர், திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜவகர், பாலமுருகன், ஒன்றியக்குழு உறுப்பினர் சரவணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், உதவி பொறியாளர்கள் செந்தில்குமார், சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story