மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணிகளை கலெக்டர் ஆய்வு


மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணிகளை கலெக்டர் ஆய்வு
x

மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணிகளை கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சியில்

தேசிய சிறுபான்மையினர் நல ஆணையத்தின் மூலம் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் 30 படுக்கை வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டார். அப்போது பணிகளை மூன்று மாதத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட்டார். தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் ஏற்கனவே செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பிரசவ வார்டில் குழந்தை பெற்றுள்ள தாய்மார்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க தாய்மார்கள் நல்ல ஊட்டச்சத்து உணவினை சாப்பிட வேண்டும். 6 மாதத்திற்கு குழந்தைகளுக்கு தாய்ப்பாலை கட்டாயம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஆய்வின்போது துணை இயக்குனர் மணிமாறன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திரிபுரசுந்தரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி, வட்டார மருத்துவ அலுவலர் வேலு மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உடன் இருந்தனர்.


Next Story