ரேஷன் கடைகளில் கலெக்டர் லலிதா ஆய்வு
ரேஷன் கடைகளில் கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை
பொறையாறு:
தரங்கம்பாடி வட்டத்தில் மொத்தம் 94 ரேஷன் கடைகள் உள்ளன. செம்பனார்கோவில் அருகே நவீன மயமாக்கப்பட்ட பொன்செய், கஞ்சாநகரம் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார். அப்போது ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை, ஆயில் உள்ளிட்ட பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள அலுவலர்களிடம், ரேஷன் பொருட்களை தரமாக பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.மேலும் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் எந்திரங்களை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story