'விடாமுயற்சியுடன் மாணவர்கள் உழைத்தால் வெற்றி நிச்சயம்'; கலெக்டர் விசாகன் பேச்சு


விடாமுயற்சியுடன் மாணவர்கள் உழைத்தால் வெற்றி நிச்சயம்; கலெக்டர் விசாகன் பேச்சு
x

விடாமுயற்சியுடன் மாணவர்கள் உழைத்தால் வெற்றி நிச்சயம் என்று கலெக்டர் விசாகன் பேசினார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் ஆர்.வி.எஸ்.பொறியியல் கல்லூரி கல்வி குழுமத்தின் 32-வது பட்டமளிப்பு விழா ஆர்.வி.எஸ். பத்மாவதி மஹாலில் நடந்தது. விழாவுக்கு கல்லூரி நிறுவனர் கே.வி.குப்புசாமி தலைமை தாங்கி, பல்கலைக்கழக தேர்வுகளில் பதக்கங்கள் பெற்ற டெக்ஸ்டைல் துறை மாணவர்கள் குருசித்ரா, ரம்யா, வேளாண்மைத்துறை மாணவர்கள் பிரியதர்ஷனி, சுருதி ஆகியோரை பாராட்டி தங்க நாணயங்களை வழங்கினார்.

திண்டுக்கல் ஆர்.வி.எஸ்.கல்வி நிறுவனங்களின் இயக்குனர் கிருஷ்ணகுமார் பட்டமளிப்பு விழா அறிக்கையை சமர்பித்தார். விழாவில் ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவரும், திண்டுக்கல் கலெக்டருமான விசாகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1,707 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், மாணவ-மாணவிகள் தாங்கள் கற்ற கல்வியை சமுதாய மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். தனித்திறனை வளர்த்து, அடுத்த இலக்கை நோக்கி மாணவ-மாணவிகள் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். குதிரை பந்தயம்போல் தான், மாணவ-மாணவிகளின் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. வெற்றிக்கும், தோல்விக்கும் இடைப்பட்ட தூரம் மிகவும் குறைவு. எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஓடிக்கொண்டே இருந்தால் வெற்றி இலக்கை எட்டி விடலாம். தோல்வியை தழுவிய மாணவர்கள் மனம் தளரக்கூடாது. முயற்சி செய்ய வேண்டும். விடாமுயற்சி, கடின உழைப்பு, நேர்மை இருந்தால் வெற்றி நிச்சயம் என்றார்.

விழாவில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கற்பூரசுந்தரபாண்டியன், ஆர்.வி.எஸ்.கல்வி குழுமத்தின் ஆலோசகர் பி.கே.பத்ரி, முதன்மை செயல் அதிகாரி வேணுகோபால் முருகதாஸ், ஆர்.வி.எஸ். கல்லூரிகளின் முதல்வர்கள் ஜெகதீசன், ராஜ்குமார், ரஞ்சித், செயலாளர் உமாபிரியன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.


Next Story