கலெக்டர் முருகேஷ் ஆய்வு


கலெக்டர் முருகேஷ் ஆய்வு
x

கலசபாக்கம் அரசு மருத்துவமனையில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

கலசபாக்கம்

கலசபாக்கம் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் அறுவை சிகிச்சை அரங்கத்தை கலெக்டர் பா.முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு இருந்த டாக்டர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க ஏற்பாடு செய்யுங்கள். இப்படி காலதாமதம் செய்தால் மக்கள் மருத்துவ சிகிச்சை பார்ப்பதற்கு அங்கும் இங்கும் அலைகிறார்கள் என்று கேட்டார்.

பின்னர் அறுவை சிகிச்சை அரங்கத்துக்கு போதுமான கூடுதல் மின்சார வசதி செய்து தர வேண்டும் என மருத்துவ அலுவலர்கள் கேட்டுக்கொண்டனர் அதற்கு உடனடியாக ஏற்பாடு செய்து கொடுப்பதாகவும் உறுதியளித்தனர்.

மேலும் மருத்துவமனைக்கு வரும் சாலை குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என நோயாளிகளும், டாக்டர்களும் கோரிக்கை வைத்தனர்.

அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கலெக்டர் உறுதியளித்தார்.

ஆய்வின்போது தாசில்தார் ராஜராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி, டாக்டர்கள் சவுத்ரி, பாலகிருஷ்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story