ஈரோட்டில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு


ஈரோட்டில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
x

ஈரோட்டில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி பிரகாஷ் ஆய்வு செய்தார்.

ஈரோடு

ஈரோட்டில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி பிரகாஷ் ஆய்வு செய்தார்.

ஆய்வு

ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி ஈரோடு பஸ் நிலையத்தில் ரூ.45 கோடியே 32 லட்சம் செலவில் 4 மேம்பாட்டு பணிகளும், ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் நேதாஜி தினசரி மார்க்கெட் மேம்பாடு செய்யும் பணிகள் ரூ.32 கோடியே 29 லட்சம் மதிப்பிலும் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஆவணகாப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை ஆணையாளருமான ஜி.பிரகாஷ் மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆர்.கே.வி. ரோட்டில் நவீன காய்கறி சந்தையானது வாகனம் நிறுத்துமிடம் 4 ஆயிரத்து 670 சதுரஅடி பரப்பளவிலும், தரைதளம் 5 ஆயிரத்து 42 சதுரஅடி பரப்பளவிலும் அமைக்கப்படுகிறது. அடித்தளத்தில் 79 நான்கு சக்கர வாகனங்களும், 102 இரண்டு சக்கரவாகனங்களும், வெளிப்புறத்தில் 40 நான்கு சக்கரவாகனங்களும், 75 இரண்டு சக்கரவாகனங்களும் நிறுத்தும் அளவிற்கு பணிகள் நடைபெற்று வருகிறது.

289 கடைகள்

இந்த நவீன காய்கறி சந்தையில் சுமார் 289 கடைகள் கட்டப்பட்டு வருகிறது. மேலும் மின் தூக்கி, தீ தடுப்பான், கண்காணிப்பு கேமரா, மின் அறை, கழிவறை உள்ளிட்ட வசதிகளும் அமைக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து ஈரோடு காமராஜர் அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் சமைத்து அனுப்பக்கூடிய சமையல் கூடத்தினையும், பெரியார் வீதியில் உள்ள அரசு தொடக்க பள்ளிக்கூடத்தில் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட காலை உணவினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், செயற்பொறியாளர் விஜயகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story