திருச்சியில் வேளாண் கண்காட்சி:விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்கலெக்டர் பழனி தகவல்


திருச்சியில் வேளாண் கண்காட்சி:விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்கலெக்டர் பழனி தகவல்
x
தினத்தந்தி 27 July 2023 12:15 AM IST (Updated: 27 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் நடைபெறும் வேளாண் கண்காட்சியில் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்

தமிழக வேளாண்மைத்துறை மற்றும் உழவர் நலத்துறை, விவசாயிகளை ஊக்குவிக்கும்பொருட்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த சட்டசபை கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் வேளாண் பெருமக்கள் பயன்பெறும்பொருட்டு நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் எந்திரங்கள், மதிப்புக்கூட்டு தொழில்நுட்பங்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்துபவர்கள் பயன்பெறும் வகையில் திருச்சியில் விவசாயி கண்காட்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 29-ந்தேதி வரை 3 நாட்கள் திருச்சியில் உள்ள கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் விவசாய கண்காட்சி நடைபெறுகிறது. இதில் வேளாண்மையை எளிமைப்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்பங்கள், வருமானத்தை பெருக்குவதற்கான வேளாண் பொருட்களை மதிப்புக்கூட்டு நுட்பங்கள், பாரம்பரியமிக்க மரபுசார் தொழில்நுட்பங்கள், ஏற்றுமதி வாய்ப்புகள், வேளாண் விளைபொருட்களை பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள், வேளாண் காடுகள், உயரிய தோட்டக்கலை தொழில்நுட்பங்கள், நவீன வேளாண் எந்திரங்கள், பசுமைக்குடில் தொழில்நுட்பங்கள், பாரம்பரிய நெல் மற்றும் பிற பயிர் ரகங்கள், பாரம்பரிய மரபுசார் வேளாண் கருவிகள், பாரம்பரிய உணவு அரங்கங்கள், வேளாண் மானிய உதவிகள் பெற முன்பதிவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற உள்ளன. கண்காட்சியை காண வரும் விவசாயிகள் தங்களின் ஆதார் நகலை எடுத்து வருதல் வேண்டும். எனவே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், இக்கண்காட்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.


Next Story