முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு கலெக்டர் பாராட்டு
முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
திருச்சி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல்-அமைச்சரின் முகவரித்துறைக்கான ஆய்வுக்கூட்டம் கடந்த 2-ந் தேதி தலைமை செயலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு யாஸ்மினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதல்வரின் முகவரித்துறையின் கீழ் பெறப்பட்ட 1,400 மனுக்களில் 97 சதவீதம் மனுக்களுக்கு சிறப்பாக தீர்வு கண்டதற்காக தனது பாராட்டுக்களை தெரிவித்தார். இந்தநிலையில் திருச்சியில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு யாஸ்மின் பணியை பாராட்டி கலெக்டர் பிரதீப் குமார் பாராட்டு சான்றிதழை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது அவர், முதல்-அமைச்சர் தன்னை பாராட்டியது மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருப்பதாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story