புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலையில் புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை காந்தி நகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் வருகிற 8-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் மாபெரும் புத்தக திருவிழா நடைபெற உள்ளது.
இதற்கான அரங்கங்கள் அமைக்கப்பட்டு மின்விளக்கு வசதி, அலங்காரம் போன்ற அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை இன்று கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல், நகராட்சி ஆணையர் முருகேசன் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story