கலெக்டர் கள ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்


கலெக்டர் கள ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
x

சாதியை சொல்லி அவமதித்ததாக வழக்கில் கலெக்டர் கள ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுைர ஐோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மதுரை

தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த மதிவாணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கடந்த மார்ச் மாதம் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நண்பரின் தந்தை இறப்பு நிகழ்ச்சிக்கு சென்றேன். அப்போது அங்கிருந்தவர்கள் நான் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் எங்கள் பகுதிக்கு எப்படி வரலாம்? என கேள்வி எழுப்பினர். உடனடியாக அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. பின்னர் என்னை அழைத்துச்சென்ற நண்பர்கள் சிலரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக தகவல் கிடைத்தது.

இதுகுறித்து சிவகிரி போலீசில் புகார் அளித்தேன். புகாரின் அடிப்படையில் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணையை கிடப்பில் போட்டு விட்டனர். எனவே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சத்திகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி மனுதாரர் குற்றச்சாட்டு குறித்து தென்காசி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கள ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வருகிற 12-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

-------------


Related Tags :
Next Story