அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஸ்ரீதர் திடீர் ஆய்வு


அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஸ்ரீதர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 8 Sept 2023 12:15 AM IST (Updated: 8 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஸ்ரீதர் திடீர் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஸ்ரீதர் திடீர் ஆய்வு செய்தார்.

குமரி மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில் இடைக்கோடு பகுதியில் அமைந்துள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நேற்று கலெக்டர் ஸ்ரீதரில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள், மருந்து இருப்புகள், பராமரிப்பு பணிகள் மற்றும் பணியாளர்களின் வருகை பதிவேடு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களையும் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

இடைக்கோடு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தைகள் நல மகப்பேறு மருத்துவம், கண் சிகிச்சை, பல் மருத்துவம், சித்த மருத்துவம், இயன்முறை மருத்துவம், தொழு நோய் பிரிவு, காச நோய் பிரிவு, முதியோர் பிரிவு, குடும்ப கட்டுப்பாடு, ஆரோக்கியமான இளம் பருவகால ஆலோசனை, மாரடைப்பு, பக்கவாதம், மகப்பேறு, தீக்காயம், நாய்க்கடி, பாம்புக்கடி, தேள்கடி உள்ளிட்ட போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் ரூ.63 லட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட கூடுதல் மருத்துவ கட்டிடத்தினை நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்கள் வெளியில் அமரும் விதமாக தற்காலிக கூடாரம் அமைத்திடவும் அறிவுறுத்தப்பட்டது என்றார்.

ஆய்வின் போது துணை இயக்குனர் (பொது சுகாதாரம்) மீனாட்சி மற்றும் டாக்டர்கள், செவிலியா்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story