திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் சாருஸ்ரீ திடீரென ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
கலெக்டர் ஆய்வு
திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் அமைந்துள்ள இ-சேவை மையத்தினை கலெக்டர் சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது தினந்தோறும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், இ-சேவை மையத்திற்கு வருகை புரிந்தவர்களிடம் மையத்தில் வழங்கப்படும் பணிகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். அப்போது இ-சேவை மைய ஊழியர்களிடம் பொதுமக்களுக்கு தேவையான பணிகளை உடனடியாக செய்து கொடுக்குமாறு அறிவுறுத்தினார்.
கைதிகளின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்
தொடர்ந்து தாசில்தார் அலுவலகத்தில் செயல்படும் சமூக பாதுகாப்புதிட்டம், வட்டவழங்கல் அலுவலகம், தனிதாசில்தார், நகர நிலவரி திட்ட அலுவலகம் ஆகிய அலுவலகங்களை கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர் திருவாரூர் பெண்கள் கிளை சிறைசாலையினை பார்வையிட்டு அங்கு கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, கைதிகளின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். இதில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.