ஆலங்குளம் அருகே கலெக்டர் திடீர் ஆய்வு
ஆலங்குளம் அருகே கலெக்டர் ஆகாஷ் திடீர் ஆய்வு மேற்ெகாண்டார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். காவலாகுறிச்சி கிராமத்திற்கு சென்ற அவர், அங்கு தரமான சாலை போடப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்தார். மேலும் அங்குள்ள அங்கன்வாடி சமுதாய நலக்கூடத்தையும் பார்வையிட்டார். தொடர்ந்து கடங்கநேரி ஊராட்சி வெங்கடேஸ்வரபுரத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மை பூங்காவுக்கு சென்ற அவர் அங்கு இயற்கை உரம் தயாரிக்கும் மையத்தை பார்வையிட்டார். மேலும் கடங்கநேரி கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திலகராஜ், பார்த்தசாரதி, ஒன்றிய பொறியாளர்கள் பூச்செண்டு, செல்வின், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், செல்வம், காவலாகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சுரேஷ், துணை ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், கடங்கநேரி ஊராட்சி மன்ற தலைவர் அமுதா தேன்ராஜ், ஊராட்சி செயலாளர்கள் ஆறுமுகபாண்டி, சுடலைஒலிவு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.