அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு
அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பள்ளியில் நடைபெற்ற 10-ம் வகுப்பு 2-ம் திருப்புதல் தேர்வினையும், அறிவியல் ஆய்வகம், நூலகம், சத்துணவு கூடம், ஆசிரியர் வகுப்பறை உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளியில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது பற்றியும், மாணவர்களிடம் அதன் பயன்பாடு குறித்தும் கேட்டறிந்தார். அங்கு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பொது தேர்வு எழுதுவதற்கு சொல்வதை, எழுதுவதற்கான உதவியாளர் பெறுவது குறித்தும் உரிய அறிவுறுத்தல் வழங்கினார். மேலும் உடல்நல குறைபாடு உள்ள மாணவரிடம் குறையை கேட்டறிந்து மருத்துவ வசதி மேற்கொள்ளவும், பள்ளி மற்றும் வளாகத்தில் திருக்குறள் சார்ந்த வண்ண படங்கள் வரைவது குறித்தும், ஆசிரியர்கள் சிறப்பாக செயல்படவும் ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி உடனிருந்தார்.