தென்கரை ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு
தென்கரை ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு செய்தார்
சோழவந்தான்
சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சியில் நடைபெற கூடிய ஊராட்சி புதிய கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம், சிறுபாலங்கள், குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பாடு மற்றும் அடிப்படைவசதி குறித்து மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், மாவட்ட கூடுதல் கலெக்டர் சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஊராட்சி தலைவர் மஞ்சுளா அய்யப்பன், துணைத்தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் நடைபெறக்கூடிய வேலைகள் குறித்து எடுத்துக்கூறினர். தொடர்ந்து கால்நடை துணை நிலையத்தை ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் மரக்கன்றுகள் நட்டார். ஊத்துக்குளி கிராமத்தில் குடிநீர் விநியோகம் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் பணி குறித்து ஆய்வு மேற்கண்டார். இதில் வாடிப் பட்டி யூனியன் ஆணையாளர்கள் ரத்தினகலாவதி, வள்ளி, மண்டல துணைவட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சியம்மாள், என்ஜினீயர் பூமாண்டி, பணி மேற்பார்வையாளர் சுஜாதா ஆகியோர் கலந்துகொண்டனர்.