ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டத்தை கலெக்டர் நடத்த வேண்டுகோள்


ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டத்தை கலெக்டர் நடத்த வேண்டுகோள்
x

ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டத்தை கலெக்டர் நடத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூரில், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் 4-வது மாவட்ட மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆளவந்தார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில பணி நிறைவு சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் இளவரசன் சங்கத்தின் வேலை அறிக்கையை வாசித்தார். மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் சங்கத்தின் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். மாநில செயலாளர் மனோகரன் வாழ்த்தி பேசினார்.

தி.மு.க. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளான அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வழங்குகிற குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்குவது போல் மாநில அரசும் மாதந்தோறும் மருத்துவ படியாக ரூ.1,000 வழங்கிட வேண்டும். ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டத்தை பெரம்பலூர் மாவட்ட கலெக்டரே நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


Next Story