குழந்தைகள் நல மையத்தை கலெக்டர் திடீர் ஆய்வு


குழந்தைகள் நல மையத்தை கலெக்டர் திடீர் ஆய்வு
x

சின்னசேலம் அருகே குழந்தைகள் நல மையத்தை கலெக்டர் திடீர் ஆய்வு

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

சின்னசேலம் தாலுகாவுக்குட்பட்ட அம்மையகரம் கிராமத்தில் உள்ள குழந்தைகள் நல மையத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் நேரில் ஆய்வுசெய்தார். அப்போது அங்கு காய்கறி தோட்டம் அமையவுள்ள இடத்தை பார்வையிட்டு கிராமப்புறங்களில் அரசுக்குச் சொந்தமான காலியாகவுள்ள புறம்போக்கு நிலங்களில் காய்கறி தோட்டம் உருவாக்கி குழந்தைகள் நல மையத்துக்கு காய்கறி மற்றும் கீரைவகைகளை வழங்கிட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து குழந்தைகள் நல மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவு, இணை உணவு, ஊட்டச்சத்து மாவு முறையாக வழங்கப்படுகிறதா? என குழந்தைகளின் பெற்றோர்களிடம் கேட்டறிந்த அவர் குழந்தைகளுக்கு பல வித சத்தான, சுவையான உணவு வகைகளையும் வழங்கிட குழந்தைகள் நல மைய அமைப்பாளர்களிடம் அறிவுறுத்தினார். அப்போது, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் செல்வி, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ராஜலட்சுமி, மண்டல துணை தாசில்தார் மனோஜ் முனியன், வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி மற்றும் குழந்தைகள் நல அமைப்பாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story