பனை விதை சேகரிப்பை கலெக்டர் பார்வையிட்டார்


பனை விதை சேகரிப்பை கலெக்டர் பார்வையிட்டார்
x

கீழ்வீராணம் ஊராட்சியில் பனை விதை சேகரிப்பை கலெக்டர் பார்வையிட்டார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கடந்த சில நாட்களுக்கு முன் ஒவ்வொரு ஊராட்சியிலும் 100 நாள் பணியாளா்களை சுமார் 3000 பனைவிதைகளை சேகரித்து அவரவர் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரி கரைகள், குளக்கரைகள், அரசுக்கு சொந்தமான இடங்கள், சாலை ஓரங்கள் என பல இடங்களில் பனை விதைகளை நடவு செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன்படி காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்வீராணம் ஊராட்சி மன்ற தலைவா் உமாதேவி சரவணண் 100 நாள் பணியாளா்களை கொண்டு பனை விதைகள் சேகரிப்பில் ஈடுபட்டார். இதுவரை சுமாா் 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பனை விதைகளை சேகரித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் திடீரென நேற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கீழ்வீராணம் ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டார்.


Next Story