குழு நடனப்போட்டியில் மாநில அளவில் சாதனை:கள்ளக்குறிச்சி மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கலெக்டர் பாராட்டு


குழு நடனப்போட்டியில் மாநில அளவில் சாதனை:கள்ளக்குறிச்சி மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கலெக்டர் பாராட்டு
x
தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குழு நடனப்போட்டியில் மாநில அளவில் சாதனைபடைத்த கள்ளக்குறிச்சி மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கலெக்டர் பாராட்டு தொிவித்தாா்.

கள்ளக்குறிச்சி


சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாநில அளவிலான குழுநடனப்போட்டி நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த புக்கிரவாரி சிவன் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் 6 பேர் கலந்து கொண்டு குழு நடனம் ஆடினார்கள். இவர்கள் மாநில அளவில் 3-ம் இடம் பிடித்தனர். .இவர்களுக்கு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். இதையடுத்து, கள்ளக்குறிச்சி வந்த மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் ஷ்ரவன்குமார் கலந்து கொண்டு, சுய உதவி குழுவினருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

அப்போது தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், உதவி திட்ட அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.


Next Story