கல்லூரி சந்தையில் ஆர்வம் காட்டிய மாணவர்கள்


கல்லூரி சந்தையில் ஆர்வம் காட்டிய மாணவர்கள்
x
திருப்பூர்

போடிப்பட்டி, ஜன.5-

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்ட மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் உடுமலை அரசு கலைக்கல்லூரி இணைந்து நடத்திய கல்லூரி சந்தை நிகழ்ச்சி 2 நாட்கள் நடைபெற்றது. உடுமலை அரசு கலைக்கல்லூரியில் நேற்று மற்றும் முன்தினம் நடைபெற்ற நிகழ்வில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் கைவினைப் பொருட்கள், உணவுப்பொருட்கள், ஆயத்த ஆடைகள், அழகுப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த கல்லூரி சந்தை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கிச் சென்றனர்.


Next Story