கிருஷ்ணகிரி அரசுக்கல்லூரியில் ஐம்பெரும் விழா
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கல்லூரியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, முத்தமிழ் விழா, நுண்கலை, பேரவை நிறைவு விழா என ஐம்பெரும் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் அனுராதா தலைமை தாங்கினார். தாவரவியல் துறை பேராசிரியர் ரவி வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் பேசுகையில், இந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் 30 பேர் இதே கல்லூரியில் பேராசியர்களாகி உள்ளனர் என்றார். தொடர்ந்து ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது.
பின்னர் பாலக்கோடு எம்.ஜி.ஆர். கலைக்கல்லூரி முதல்வர் செண்பகலட்சுமி இலக்கியமும், நகைச்சுவையும் என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து கல்வி, விளையாட்டு, நுண்கலை மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளை தமிழ்த்துறை பேராசிரியர் ராஜா தொகுத்து வழங்கினார். இதில் அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.