கல்லூரி மாணவி ஆட்டோ டிரைவருடன் தஞ்சம்


கல்லூரி மாணவி ஆட்டோ டிரைவருடன் தஞ்சம்
x
தினத்தந்தி 27 March 2023 12:15 AM IST (Updated: 27 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவி ஆட்டோ டிரைவருடன் தஞ்சம்

கன்னியாகுமரி

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே உள்ள கோட்டகம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித் (வயது 23), ஆட்டோ டிரைவர். இவரும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஆர்யாவும் (20) காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு ஆர்யாவின் வீட்டில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காதல் ஜோடி இருவரும் வீட்டை விட்டு வெளிேயறி மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் போலீசாரிடம், தாங்கள் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாகவும், தங்களை சேர்த்து வைக்குமாறு கேட்டுக்கொண்டனர். இதையடுத்து போலீசார் இருவரின் குடும்பத்தினரையும் பேச்சு வார்த்தைக்காக அழைத்தனர். ஆனால் யாரும் போலீஸ் நிலையத்திற்கு வரவில்லை. இதையடுத்து போலீசார் காதல் ஜோடி இருவரையும் சேர்த்து வைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.


Next Story