கல்லூரி மாணவிகள் நடனம்


கல்லூரி மாணவிகள் நடனம்
x

பாம்பனில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கல்லூரி மாணவிகள் நடனமாடினார்கள்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

பாம்பன் தரவைத்தோப்பு பகுதியில் செயல்பட்டு வரும் அன்னை கொலாஸ்டிகா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கல்லூரியில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவிற்கு ராமேசுவரம் பங்குத்தந்தை தேவசகாயம் முன்னிலை வகித்தார். விழாவில் கல்லூரியின் முதல்வர் ஆனிபெர்பெட்சோபி, கல்லூரியின் நிர்வாகி அருட்சகோதரி ரூபி, கல்லூரியின் துணை முதல்வர் எமல்டா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் வகையில் கல்லூரி மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் தத்ரூபமாகவே இருந்தது. மேலும் ஏராளமான கல்லூரி மாணவிகள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தும் நடனம் ஆடினார்கள்.


Next Story