கல்லூரணி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


கல்லூரணி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

அருப்புக்கோட்டை அருகே கல்லூரணி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர்

விருதுநகர்,

அருப்புக்கோட்டை அருகே கல்லூரணி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகம்

அருப்புக்கோட்டை அருகே கல்லூரணி சத்திரிய நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்றுமுன்தினம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வாஸ்து பூஜை, வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

விழாவையொட்டி நேற்று காலை 7 மணிக்கு 2-வது கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கோ பூஜை நடைபெற்று. காலை 9 மணிக்கு மேல் மங்கள வாத்தியங்கள் முழங்க கும்ப புறப்பாடு நடைபெற்றது.

தொடர்ந்து ராஜகோபுரம் மற்றும் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அன்னதானம்

விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சியும், கல்லூரணி எஸ்.பி.கே. பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவில் கல்லூரணி சத்திரிய நாடார்கள் உறவின்முறை அம்பலகாரர் புலமாடன், துணைத்தலைவர் சிந்தனைச்செல்வன், துணைச்செயலாளர்கள் ராஜேந்திரன், ஆசைத்தம்பி, நிர்வாகி கலைச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரணி சத்திரிய நாடார்கள் உறவின்முறை தலைவர் ராசமாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story