கல்லூரி பேராசிரியர்கள் தர்ணா போராட்டம்


கல்லூரி பேராசிரியர்கள் தர்ணா போராட்டம்
x

நெல்லை கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் நேற்று மாலை காத்திருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் அரசு விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணி மேம்பாடு கோப்புகளை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் நாகராஜன், மாநில தலைவர் ராதாகிருஷ்ணன், மண்டல செயலாளர் சிவஞானம் துணைத்தலைவர் நசீர், கிளைச் செயலாளர் நீலகண்ட பாபு மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story