ஆத்தூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி


ஆத்தூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி
x

ஆத்தூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம்

ஆத்தூர்:

ஆத்தூர் அருகே உள்ள வளையமாதேவி பகுதியை சேர்ந்தவர் ரவி. விவசாயி. இவருடைய மகள் ஷாலினி (வயது 19). இவர் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சமீபத்தில் நடந்த பருவத்தேர்வில் ஒரு சில பாடங்களில் அவர் தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ஷாலினி வீட்டில் யாரும் இல்லாத போது அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆத்தூர் ரூரல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story