கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 19 Sept 2023 12:30 AM IST (Updated: 19 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே செல்போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே செல்போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கோடாங்கிபட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ராசையா. இவருடைய மகள் சசி காஞ்சனா (வயது 20). இவர் விளாத்திகுளத்தில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

சசி காஞ்சனா தனது பெற்றோரிடம் செல்போன் வாங்கித்தரும்படி கேட்டதாகவும், இதற்கு அவர்கள் சில நாட்கள் கழித்து வாங்கித்தருவதாகவும் கூறியதாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதனால் விரக்தி அடைந்த சசி காஞ்சனா நேற்று முன்தினம் ஆட்டுக்கொட்டைகை அருகே உள்ள தங்களுக்கு சொந்தமான மற்றொரு வீட்டிற்கு சென்றார்.

அங்கு வைத்து அவர் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அவரது தாயார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகள் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக சங்கரலிங்கபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சசி காஞ்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரிதாபம்

இதுதொடர்பாக தகவல் அறிந்த மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு நேரடியாக சென்று மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

விளாத்திகுளம் அருகே செல்போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story