தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை


தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை
x

தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை

தஞ்சாவூர்

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ராஜாஜி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகன் கோகுல் (வயது 21). இவர் தஞ்சையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வந்தார். சம்பவத்தன்று இவர் வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கோகுல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story