தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை


தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை
x

தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை

திருவாரூர்

முத்துப்பேட்டையை அடுத்த எடையூர் சோத்திரியம் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி பத்மா. இவர்களது மகள் லட்சியானி (வயது17). இவர் வேதாரண்யம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு லட்சியானி உதயமார்த்தாண்டபுரம் கடைத்தெருவில் உள்ள தனது சித்தி புனிதா வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று கல்லூரியில் நடக்கும் பொங்கல் விழாவிற்கு செல்வதாக சித்தியிடம் லட்சியானி கூறினார். இதற்கு சித்தி போகக்கூடாது என லட்சியானியை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த லட்சியானி யாரும் இ்ல்லாத நேரத்தில் வீட்டின் பின்புறத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு கொண்டார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பபரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து புனிதா முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து லட்சியானி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story