கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

தோகைமலை அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

கல்லூரி மாணவர்

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கீரனூர் ஊராட்சி மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் யுவன்சங்கர் (வயது 18). இவர் திண்டுக்கலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக் பிரிவில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.இவர் தினமும் மீனாட்சிபுரத்தில் இருந்து பஸ்சில் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினமும் யுவன்சங்கர் வழக்கம்போல் கல்லூரிக்கு பஸ்சில் சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்தார்.

தற்கொலை

பின்னர் சிறிது நேரத்தில் வீட்டின் ஒரு அறைக்குள் சென்று மின்விசிறியில் யுவன்சங்கர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர் யுவன்சங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து யுவன்சங்கரின் தந்தை பாலசுப்பிரமணியன் தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து, யுவன்சங்கர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story