கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 16 Feb 2023 12:30 AM IST (Updated: 16 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார்.

தேனி

தேனி விஸ்வதாஸ் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ஜோதிமுருகன் (வயது 52). கூலித்தொழிலாளி. இவருடைய மகள் சர்மிளா (21). இவர் தேனி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இவர் வீட்டின் மாடியில் உள்ள அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அதைப் பார்த்த ஜோதிமுருகன் உறவினர்கள் உதவியுடன் அவரை தூக்கில் இருந்து இறக்கினார். மயக்க நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் தற்கொலை செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் ஜோதிமுருகன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story