குளித்தலை அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை


குளித்தலை அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
x

குளித்தலை அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

குளித்தலை,

கல்லூரி மாணவி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள திம்மம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தனலெட்சுமி. இந்த தம்பதிக்கு சன்மதி (வயது 19) என்ற மகள் இருந்தார். இவர் குளித்தலை அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். (சி.ஏ.) 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் ஒழுங்காக படிக்கவில்லை என்று சன்மதியை அவரது தாயார் தனலெட்சுமி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சன்மதி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார்.

தற்கொலை

இவரது அலறல் சத்தத்தை கேட்ட அவரது பெற்றோர் மற்றும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீக்காயமடைந்த சன்மதியை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சன்மதி பரிதாபமாக இறந்தார்.இதுதொடர்பாக கண்ணன் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே மட்டுமல்லாமல் அவர் படித்த கல்லூரி மாணவிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story