கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
சிதம்பரம் அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அண்ணாமலை நகர்,
சிதம்பரம் அருகே கீழ்அனுவம்பட்டு நவாப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் திவ்யதர்ஷினி (வயது 20). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உடற்கல்வித்துறையில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந் தேதி திவ்யதர்ஷினியின் தாய் அல்லிராணி புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
இதைகேட்டு மனமுடைந்த திவ்யதர்ஷினி அன்றைய தினம் காலை 11 மணிக்கு கல்லூரியில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் அவரை மீட்டு சிதம்பரத்தில் உள்ள கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி திவ்யதர்ஷினி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.