மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி


மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி
x

சந்தவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

சந்தவாசல் அருகே எட்டிவாடி கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 65). இரவது மனைவி கிளியம்மாள் (45), மகன்கள் வெங்கடேசன் (25) விக்னேஷ் (21).

விக்னேஷ் கலசபாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். வெங்கடேசன் வேலூர் இடையஞ்சாத்து பகுதியில் வெல்டிங் வேலை செய்து வருகிறார்.

கிளியம்மாள் சித்தாள் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு மோட்டார்சைக்கிளில் விக்னேஷ், வெங்கடேசன், கிளியம்மாள் ஆகிய மூவரும் வேலூரில் இருந்து ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

சந்தவாசல் அருகே பால்வார்த்துவென்றான் கிராமம் அருேக சென்றபோது வேலூர் நோக்கி வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

கிளியம்மாள், வெங்கடேசன் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து சந்தவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story