தேர்வு பயத்தில் விஷம் குடித்த கல்லூரி மாணவர் சாவு


தேர்வு பயத்தில் விஷம் குடித்த கல்லூரி மாணவர் சாவு
x
தினத்தந்தி 1 April 2023 12:15 AM IST (Updated: 1 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேர்வு பயத்தில் விஷம் குடித்த சென்னை கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

கருங்கல்:

தேர்வு பயத்தில் விஷம் குடித்த சென்னை கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

கல்லூரி மாணவர்

கருங்கல் அருகே உள்ள மேல்மிடாலம் அன்னை தெரசாள் காலனியைச் சேர்ந்தவர் ஜான்சன். இவருடைய மகன் ஆன்றோ ஜாய் (வயது 22). இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்து எம்.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு ஏற்கனவே எழுதிய தேர்வுகளில் அரியர் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால், கடந்த சில நாட்களாக தேர்வு பயத்தில் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

விஷம் குடித்தார்

இந்தநிலையில் சம்பவத்தன்று ஆன்ேறா ஜாய் கல்லூரி விடுதியில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர், ஆன்றோ ஜாய்யின் குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக குமரி மாவட்டம் அழைத்து வந்து குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் ஆன்றோ ஜாய் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆன்றோ ஜாய்யின் தந்தை ஜான்சன் கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேர்வு பயத்தில் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story