கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு


கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு
x

கல்லணையில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி:

கல்லணையில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

கல்லூரி மாணவர்

திருச்சி தென்னூர் அண்ணா நகரை சேர்ந்தவர் ஜியாவுல்ஹக். இவருடைய மகன் முகமது முகசின்(வயது 18). இவர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

முகமது முகசின், தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த சாகித்துடன் தஞ்சை அருகே உள்ள கல்லணைக்கு வந்தார்.

ஆற்றில் மூழ்கி சாவு

பின்னர் முகமது முகசின் கல்லணையில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தார். அப்போது அவர், ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினார்.

இதுகுறித்து சாகித், தோகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதை தொடர்ந்து போலீசார், திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆற்றில் இறங்கி தேடி முகமது முகசின் உடலை மீட்டனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தோகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அய்யாபிள்ளை மற்றும் போலீசார், முகமது முகசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story