விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி


விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 5 Feb 2023 12:15 AM IST (Updated: 5 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிாிழந்தாா்.

விழுப்புரம்

புதுச்சேரி மாநிலம் மடுகரை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் மகன் ஆகாஷ் (வயது 18). இவர் அதே பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். மடுகரையை சேர்ந்த பாவாடை என்பவர் அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் சிலரை நேற்று பண்ருட்டி அருகே திருவதிகை, உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் ஆகிய இடங்களில் உள்ள பெருமாள் கோவில்களுக்கு அழைத்துச்சென்றுள்ளார். இவர்கள் கோவில்களுக்கு சென்றுவிட்டு மதியம் விழுப்புரம் அருகே சின்னக்கள்ளிப்பட்டு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுள்ளனர். பின்னர் மதியம் 2.30 மணியளவில் ஆகாஷ் உள்ளிட்ட சிலர் அங்குள்ள தென்பெண்ணையாற்றில் இறங்கி குளித்தனர். அப்போது மடுகரையை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் விக்னேஷ் (12) என்ற மாணவன் நீரில் மூழ்கினான். இதைப்பார்த்த ஆகாஷ், விரைந்து சென்று விக்னேசை காப்பாற்ற முயன்றான். இதில் ஆகாஷ், எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இறந்தார். விக்னேஷ், கரைக்கு வந்துவிட்டான். இதுகுறித்த தகவல் அறிந்ததும் வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story