விபத்தில் காயம் அடைந்த கல்லூரி மாணவர் பலி


விபத்தில் காயம் அடைந்த கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடி அருகே, விபத்தில் காயம் அடைந்த கல்லூரி மாணவர் இறந்தார்

தென்காசி

புளியங்குடி:

புளியங்குடி அருகே, விபத்தில் காயம் அடைந்த கல்லூரி மாணவர் இறந்தார்.

தலைமை ஆசிரியை

தென்காசி மாவட்டம் புளியங்குடி தனியார் பொறியியல் கல்லூரியில் அம்மன்குளம் பகுதியை சேர்ந்த முகேஷ், சங்கரன்கோவிலைச் சேர்ந்த முகமது ரியாஸ், உமையத்தலைவன்பட்டியைச் சேர்ந்த அரவிந்த் ஆகியோர் படித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்ததும் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சங்கரன்கோவில் நோக்கி சென்றனர்.

அப்போது முள்ளிக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரியும் மணிச்செல்வி மற்றும் அவரது மகன் அபிலேஷ் ஆகிய இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் புளியங்குடி நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

பலி

புளியங்குடி சங்கரன்கோவில் ரோட்டில் வந்தபோது இரு மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் மணிச்செல்வி, அபிலேஷ், அரவிந்த், முகேஷ், முகமது ரியாஸ் ஆகிய 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து 5 பேரும் புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மணிச்செல்வி மற்றும் அவரது மகன் அபிலேஷ் ஆகியோர் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரவிந்தன், முகேஷ், முகமது ரியாஸ், ஆகியோர் தென்காசி மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்தன் (19) பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story