கல்லூரி மாணவி மாயம்


கல்லூரி மாணவி மாயம்
x

கல்லூரி மாணவி மாயமானார்.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கீழசிந்தாமணி கிராமத்தில் வசித்து வருபவர் அறிவழகன். இவரது மகள் ஜெயப்பிரியா(வயது 19). இவர் கும்பகோணத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 23-ந் தேதி காலை வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பல்வேறு இடங்களில் ஜெயப்பிரியாவை தேடியும் அவர் கிடைக்காததால், இது குறித்து அவரது தாய் தனலட்சுமி தா.பழூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப்பதிவு செய்து ஜெயப்பிரியாவை தேடி வருகிறார்.


Next Story