கல்லூரி மாணவி தற்கொலை


கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 3 Oct 2023 12:15 AM IST (Updated: 3 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கண்டமனூர் அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

கண்டமனூர் அருகே உள்ள கணேசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கப்பாண்டி. இவரது மகள் ஜெயஸ்ரீ (வயது 19). இவர், ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஜெயஸ்ரீ வயிற்று வலியால் அவதியடைந்தார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த ஜெயஸ்ரீ நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story