கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி


கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி
x

தேனி அருகே கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

தேனி அருகே அரண்மனை புதூர் காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் அசாருதீன் (வயது 22). இவருக்கு, தேனி பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பேசி பழகி வந்தனர். அப்ேபாது அசாருதீன் அந்த மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய அந்த மாணவி அவருடன் பழகி வந்தார். பின்னர் அசாருதீன் நடவடிக்கை பிடிக்காததால் அந்த மாணவி அவருடன் பேசுவதை நிறுத்தி விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அசாருதீன் உனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவேன் என்று மாணவியிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அந்த மாணவி தற்கொலைக்கு முயன்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தேனி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மலர் அம்மாள், அசாருதீன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story