பேராவூரணி அரசு கல்லூரி மாணவர் முதல் இடம்
மாநில அளவிலான வீடியோ எடிட்டிங் போட்டியில் பேராவூரணி அரசு கல்லூரி மாணவர் முதல் இடம் பெற்றாா்.
தஞ்சாவூர்
சேதுபாவாசத்திரம்;
பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 3-ம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவர்கள் கடந்த 14-ந் தேதி திருச்சி செயின்ட் ஜோசப் (தன்னாட்சி) கல்லூரியில் நடந்த மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டனர்.20- க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இப்போட்டிகளில், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவன் அபினேஷ்வரன் வெப் டிசைனிங்கில் 2-ம் இடமும், வீடியோ எடிட்டிங்கில் முதல் இடமும் பெற்றார்.போட்டியில் வெற்றி பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ள மாணவருக்கு கல்லூரி முதல்வர் (பொ) சி.ராணி மற்றும் பேராசிரியர்கள் தங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story