கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் கவர்னரை கண்டித்து கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரி மாணவரணி சார்பில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. கல்லூரி முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாணவரணி அமைப்பாளர் மதுசூதனன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு மக்களையும், சட்டமன்றத்தையும் மதிக்காமல் செயல்படும் கவர்னர் ஆர்.என். ரவியை கண்டித்தும், அவர் உடனடியாக தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாணவரணி நிர்வாகிகள், கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story