ஹெல்மெட் அணிந்து கல்லூரி மாணவர்கள், போலீசார் மோட்டார் சைக்கிளில் ஊர்வலம்
சாலை பாதுகாப்பை வலியுறுத்தி ஹெல்மெட் அணிந்து கல்லூரி மாணவர்கள், போலீசார் மோட்டார் சைக்கிளில் ஊர்வலம் சென்றனர்.
சாலை பாதுகாப்பை வலியுறுத்தி ஹெல்மெட் அணிந்து கல்லூரி மாணவர்கள், போலீசார் மோட்டார் சைக்கிளில் ஊர்வலம் சென்றனர்.
மோட்டார் சைக்கிள் ஊர்வலம்
திருச்சி மாநகர காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி 2 இடங்களில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்தை மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா தொடங்கி வைத்தார். துணை கமிஷனர்கள் சுரேஷ்குமார், ஸ்ரீதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் போக்குவரத்து போலீசார் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர்.
ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி முன் புறப்பட்ட ஊர்வலம் மெயின்கார்டு கேட், காந்திமார்க்கெட், பிரபாத் ரவுண்டானா, மதுரை மெயின்ரோடு, ராமகிருஷ்ணா பாலம், தென்னூர், கே.டி.சந்திப்பு, மாரீஸ்தியேட்டர் பாலம் வழியாக மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது.
இதுபோல் ஜமால் முகமது கல்லூரி முன் தொடங்கிய ஊர்வலம் மன்னார்புரம், ஜங்ஷன் ரெயில் நிலையம், மத்திய பஸ்நிலையம், வெஸ்டரி ரவுண்டானா, எம்.ஜி.ஆர்.சிலை ரவுண்டானா, தலைமை தபால் நிலையம், டி.வி.எஸ்.டோல்கேட் வழியாக மீண்டும் கல்லூரியை அடைந்தது.
மரக்கன்று பரிசு
முன்னதாக, ஊர்வலம் தொடக்க நிகழ்ச்சியின் போது, அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து வந்த வாகனஓட்டிகளுக்கு போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா மரக்கன்றுகளை பரிசளித்தார்.